Friday, July 16, 2010

அமெரிக்கா போல இந்திய ரூபாய்க்கு இனி தனிச்சின்னம்


பதிவு செய்த நாள் : ஜூலை 15,2010,23:32 IST


புதுடில்லி : இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம், அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளைப் போல இனி நமது கரன்சிக்கு என்று இதன் மூலம் பிரத்யேக அடையாளம் அமையும்; அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைக்கும் வரும் என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பொருளாதாரத் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆனால், டாலருக்கு நிகராக மாற்று செலாவணியாக யூரோ போல அல்லது பவுண்ட் - ஸ்டெர்லிங் போல வரும் முன், ரூபாய்க்கு என்று தனியாக சின்னம் அவசியமாகிறது. மேலும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளின் கரன்சியும், "ரூப்யா' என்றழைக்கப்படுகிறது. ஆகவே, டாலருக்கு, பவுண்டிற்கு, ஜப்பான் யென்னிற்கு தனிச்சின்னம் போல இந்திய ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய கலாசாரத்தை பறை சாற்றும் வகையிலும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் புதிய சின்னம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

போட்டி: இதையடுத்து, புதிய சின்னத்தை வடிவமைக்க மத்திய நிதி அமைச்சகம் போட்டி ஒன்றை அறிவித்தது. அதன்படி புதிய சின்னம், சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் பொதுவான கீ-போர்டில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்திய தேசிய மொழிகளின் எழுத்துருவை பெற்றிருக்க வேண்டும்; பார்த்தவுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைப்பு இருக்க வேண்டும் என நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியின் முடிவில் தேர்ந்தேடுக்கப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு, இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு 3,000 புதிய சின்னங்கள் வந்து குவிந்தன. அதிலிருந்து புதிய சின்னத்தை தேர்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம், ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தது. இக்குழுவினர், புதிய சின்னங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, இறுதியில் ஐந்து சின்னங்களை தேர்வு செய்தனர். பின், அந்த ஐந்து சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பினர். புதிய சின்னத்தை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரவை குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது: உயர்மட்டக் குழு பரிந்துரைத்த ஐந்து சின்னங்களில், மும்பை ஐ.ஐ.டி., மாணவர் உதயகுமார் உருவாக்கிய சின்னத்தை இந்திய ரூபாய்க்கான புதிய சின்னமாக அறிவிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். புதிய சின்னம் தேவநாகிரி, "ரா' மற்றும் ரோமன் "ஆர்' ஆகிய இரண்டு எழுத்துருவையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் புதிய சின்னம் இடம் பெறும். அடுத்த ஆறு மாதங்களில், நாடு முழுவதும் புதிய சின்னம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தவிர, அடுத்த 18 முதல் 24 மாதங்களில், சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்ப்யூட்டர் கீ-போர்டில் புதிய சின்னத்தை பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வசதி உருவாக்கப்படும். காகிதங்களில் பிரின்ட் அவுட் எடுக்க வசதியாக சாப்ட்வேர்களிலும் புதிய சின்னம் பதிவு செய்யப்படும். நாணய மதிப்பிற்கு தனிச்சின்னம் கொண்ட ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அமெரிக்காவின் டாலர், பிரிட்டனின் பவுண்ட் - ஸ்டெர்லிங், ஐரோப்பிய நாடுகளின் யூரோ, ஜப்பான் நாட்டின் யென் ஆகியவை ஏற்கனவே சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.

கவுரவத்தைக் காட்டும் சின்னம்: கவுரவம் மிக்க சின்னத்தை டிசைன் செய்த உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் டிசைன் பிரிவு துணைப் பேராசிரியராக இன்று முதல் பணியில் சேர்கிறார். தான் வடிவமைத்த டிசைன் தேர்வானது குறித்து பெருமிதம் கொண்டார். அவர் அளித்த பேட்டி: கிட்டத்தட்ட பலரும் இதே போல டிசைன் அனுப்பியிருந்தனர். ஆனால், ரோமானிய எழுத்தான "ஆர்' என்பதின் மேல்பகுதியில் படுக்கைக் கோடு போல அமைக்கப்பட்டிருப்பது, இந்திய நாட்டின் தேசியக் கொடி பறந்து கவுரவம் தருவது போன்ற தோற்றம், நாட்டின் பெருமையை உயர்த்தும் என்ற நோக்கில் வடிவமைத்திருக்கிறேன். அதோடு, தேவநாகரி எழுத்தும் இதில் இருப்பது சிறப்பு. இரு படுக்கைக் கோடுகள் கொண்ட அமைப்பு தேசியக் கொடியை நினைவுபடுத்தும்.இவ்வாறு உதயகுமார் கூறினார். தேசிய சின்னம் தயாரித்ததுடன், துணைப் பேராசிரியர் பதவியும் ஒரே நாளில் கிடைத்திருப்பது, அவருக்கு இரட்டை சந்தோஷம் தரும் விஷயம்.

வாசகர் கருத்து (22)
2010-07-16 05:57:50 IST
உதயகுமார் கௌகாத்தி..... உங்களுடய முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள் ..... இந்திய ரூபாய் புதிய சின்னம் வடிவமைத்ததற்கு நன்றி ....... Aks.Mani Chennai..........
ஜே - Chennai,இந்தியா
2010-07-16 05:57:31 IST
இது உண்மையிலே தேவையா? நாட்டில் இருக்கும் பல பிரச்சனைகளை தீர்க்க முதலில் முயற்சிக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் உழல், லஞ்சம், குடும்ப அரசியல், மத கலவரங்கள், ஜாதி பிரச்சனைகள், நாட்டையே சூறாடும் கயவர்களின் கூட்டம் , மத்தியிலும், மாநிலங்களிலும். இவற்றையெல்லாம் அகற்ற முதலில் முயற்சிக்க வேண்டிய அரசாங்கம், இது போன்ற தேவையே இல்லாத விஷயங்களில் நேரத்தை செலவழிப்பதேன்?...
Mani - chennai,இந்தியா
2010-07-16 04:52:48 IST
எப்படியோ சமஸ்க்ரிததை கொண்டு வந்தாச்சு . Somehow brought the sanskrit / northern / Hindi belt pride in the symbol ....long live india & its Hindian Pride.........
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-07-16 03:00:12 IST
சார், இதுக்கு கூட ஏன் சார் அமெரிக்க போல... பிரிட்டன் போல... ஜப்பான் போல...-ன்னு இந்த மின்னலோட அப்பன்மாறி ஹே...ஹே...-ன்னு இழுக்குறீங்க. கௌரவமா இந்தியாவுக்கென்று தனி சின்னம் னு போட்டா கொறஞ்சா போய்டுவீங்க. இது நமக்குன்னு ஒரு தனிப்பட்ட அடையாளம். அத கொஞ்சம் பெருமையா போடுங்க சார். ஒரு நாள் $ மாறி நம்ம சின்னமும் பெரிசா பேச படனும்ன்னு ஆசைபடுங்க. நீ வாம்மா மின்ன்ன்னன்னல்....
Josephraj - Edmonton,கனடா
2010-07-16 00:31:38 IST
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. ஹிந்தியின் ஆக்கிரமிப்பு தெரிகிறது. இடை மறைபதைர்க்கு கதை கட்டுகிறான் கோடி என்றும் கெளரவம் என்றும்""""""""""""""...
மேலும் தொடர்புடைய வாசகர் கருத்து
இந்திய ரூபாய்க்கு அடையாள குறியீடு : அமைச்சரவை ஒப்புதல்

2010-07-15 11:00:27 IST
ரூபாய் நோட்டில் ஓகே . கீ போர்டில் எப்போது ?...
சதீஷ் kumar - madurai,India
2010-07-15 11:00:25 IST
வெரி குட் யா...
இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி ஆர்.எஸ்., கிடையாது !
கோபால்ராஜ் veerasamy - sydneyaustralia,India
2010-07-16 05:35:16 IST
இதுனால யாருக்கு என்ன நன்மையோ பாமரனுக்கு குழப்பம் உறுதி,பண்றதுக்கு எவ்வளவோ இருக்கு. இப்ப இதுக்கு என்ன அவசியமோ villakkam தருவீங்களா?...
haja - saudiarabia,India
2010-07-16 03:17:57 IST
இதில் இந்திய கலாச்சாரம் தெரியவில்லை , மாறாக பார்த்த உடனேயே இது இந்தி - எழுத்து என்பது புரிகிறது . அழியாப்புகழை தேடிக்கொண்ட உதயகுமாருக்கு எனது வாழ்த்துக்கள் .......
அப்துல்கரீம் - chennai,India
2010-07-15 23:57:01 IST
அதெப்படி? சிங்கப்பூரில் இருந்து எழுதுபவர்கள் மட்டும் இந்திய இறையாண்மை பற்றி எண்ணாமல் தமிழ் தமிழ் என்று மட்டும் கூவுகிறார்கள்? தமிழ் நாடு இந்தியாவில் இல்லையா? ரூ என்று எழுதினால் அஸ்ஸாம் காரனுக்கும் பஞ்சாப் காரனுக்கும் விளங்குமா? ஆங்கிலத்தை வரவேற்கும் போது நமது நாட்டு மொழியான ஹிந்தியை வரவேற்க ஏன் இவ்வளவு தயக்கம்? யுரோ நாணயத்தின் சின்னம் எவ்வளவு அழகாக இருக்கிறதோ அதே போல நமது ரூபாயின் புதிய சின்னமும் அழகாகத்தான் இருக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.!!!!...
பரமானந்தம் - qatar,India
2010-07-15 23:43:01 IST
சரி இதை எப்படி அழைப்பது...ஆடு மாடு குதிரைனா ......?...
பாபு ரமேஷ் - lagos,Nigeria
2010-07-15 23:42:53 IST
தாய்மொழி தாய்மொழி என்று குறும் தமிழ் மக்களே ஹிந்தி தெரியாமல் அந்நிய நாடுகளில் பேசமுடியாமலும் , இந்தியனே உன்னக்கு ஹிந்தி தெரியாத என்று பிற நாட்டினர் கேக்கும்போது வெட்கத்தினால் தலைகுநிகின்ட்டோம் , இந்தியாவில் பிறந்த ஒவௌரு குடிமகனு ஹிந்தி கற்க வேண்டும் ,...
தாஜ் - germany,India
2010-07-15 23:38:36 IST
யல இவனுக்கு லூசு புடிசிடுச்சுவே சிம்பல்னா சிம்ப்ளா இருக்கணும்....
ஈஸ்வரன்.ka - Madurai,India
2010-07-15 22:04:22 IST
போங்க வேற வேலைய பாருங்க...
பாலா - Boulder,India
2010-07-15 22:03:02 IST
பண வீக்கத்தை கட்டுபடுத்த வக்கில்லை... இதுல புது சிம்பலாம்ல.. கொடுமை... கொடுமை.. ...
vaithianathan - Muscat,Pakistan
2010-07-15 21:56:18 IST
இதுல மறைமுகமா இந்தியை பயன்படுத்தி இருக்கிறார்கள். உடனே தமிழர்கள் போராட்டம் நடத்த வேண்டாம்....
சங்கர் S - Hawally,Kuwait
2010-07-15 21:55:25 IST
ஒரு தமிழனாக இருந்து தமிழை ஆதரிக்கும் போது ஒரு இந்தியனாக இருந்து ஹிந்தி மொழியை எதிர்க்காதே அது தேச துரோகம். உன்னை சொல்லி குற்றமில்லை காட்டுத் தமிழா மஞ்சள் துண்டின் வாலை பிடித்து வந்தவன் அல்லவா நீ....
க, ஸ்ரீராம் - Chennai,India
2010-07-15 21:36:53 IST
மிக்க நன்றி. இன்று முதல் நம் நாட்டில் ஏழ்மை ஒழிந்தது. இந்தியா பொருளாதார வல்லரசாகிவிட்டது. வழக்கம் போல எல்லாம் அடுத்த எலக்ஷன்ல キ வாங்கிக்கிட்டு வோட்டுபோட தயாராகிடுங்க இந்திய மக்களே.....................
rooba - chicsgo,Uzbekistan
2010-07-15 21:25:57 IST
இதனால் இந்திய பொருளாதாரத்தின் மாற்றமென்ன சரி போட்டதுதான் போட்டிங்க அந்த "R" ஐ முழுசா போட்டாலென்ன ஏற்கனவே R ஒன்ற கால் மாதிரி இருக்கும் இதுலயும் ஒரு காலை புடுங்கி படுக்கபோட்டிருக்கிறீங்க இந்த குறியீடு மக்களுக்கு புரிய எப்படியும் பல மாதங்கள்கூடஆகலாம்.அமெரிக்க,ஐரோப்பா நாடுகளை காப்பியடிக்க்கூட நமக்கு அறுபது வருஷம் தேவைபடுது ஐயோ,,, ஐயோ.... ...
balaji - singapore,Slovakia
2010-07-15 21:23:57 IST
எங்கள வச்சி காமெடி பண்ணலையே ? இதுக்கு ஹிந்தில தான் எழுதனும்னு சொல்லிடு போலாமே ! முதல்ல இந்தியாவுல பண புழக்கத்த சீரமைங்க.... வரிகள ஒழுங்க கட்டுங்க ... உலக வங்கில இந்தியாவின் கடன அடையுங்க .... அப்புறம் குறியதான் காட்டுங்க இல்ல குத்தி காடுங்க...... நீங்க எல்லாம் நாட்ட முன்னேதுற ஆளுங்க? அசிங்கம் ...
suraj - singapore,Slovakia
2010-07-15 20:26:49 IST
ரூபாய் என்று அழைப்பதை விட இந்திய டாலர் என்று அழைத்தால் நம் நாடும் வளர்ந்த நாடாகிவிட்டதாக தோன்றும். இந்த குறியீடு பார்பதற்கு ஹிந்தி போலவே தெரிகிறது, தயவு செய்து மொழி அல்லாத வேறு குறியீடு தேர்வுசெய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழும் வேண்டாம், ஹிந்தியும் வேண்டாம், பொதுவாக கண்ணை கவரும் வகையில் குறியீடு இருந்திருந்தால் அம்சமாக இருக்கும். உதாரணத்திற்கு யூரோ குறியீடு அரை பூஜியத்தின் நடுவில் இரட்டை கோடுகள் போட்டவாறு இருக்கும், அமெரிக்க டாலர் எஸ் என்ற குறியீடு போட்டு அதை அழித்துவிட்டது போல இருக்கும், அது போல வித்யாசமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் இந்த குறியீட்டை பார்த்தவுடனே அடடா என்ன ஹிந்தி வார்த்தையை பொரித்து விட்டார்களோ என்று தோன்றியது....
justin - kaliakkavilai,India
2010-07-15 20:20:01 IST
Thangalmudialadaaaa. yenna karmamo vanthittu pottu. onga velayai mattum parungappaaaaaaa....
C Suresh - Charlotte,Uzbekistan
2010-07-15 20:06:20 IST
எனக்கு இந்த சிம்பல் போட கிராமமாக உள்ளது. ஈ லோகக்தில் எந்த ஒரு கரன்சி சிம்பளும் இவளவு சிரமமாக இல்லை....
அய்யர் - mumbai,India
2010-07-15 20:05:21 IST
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கு. Let us appreciate the Govt of India. At least now we have it (after 60 yrs of republic)...
அபுரிஹானா - DAMMAM,India
2010-07-15 20:03:07 IST
ரூபாயின் புதிய அடையாளம்,கம்யூனிஸ்டுகளின் கதிர் அரிவாள் -அரிவாள் சுத்தியலை உல்டா பண்ணியதுபோல் உள்ளது!!...
nishinka - saint.petersburg,Rwanda
2010-07-15 20:01:08 IST
௨தயகுமாருக்கு இரண்டரை லட்சம் குடுத்ததுகே இப்புடிடிடி... ஒரு சிம்புல கண்டுபுடிசிருக்காறு,,,, அப்ப ஐந்து லட்சம் குடுத்தா..........என்ன பன்னுவாறு ??????????????????????????????????????????...
நா ரா கோவிந்த் - Coimbatore,India
2010-07-15 19:19:30 IST
பெயர் என்ன வைக்கணும்? டாலர் பவுண்டு போல....இதுக்கு ருப்யா னு கூப்பிடலாம்...சில்லறைக்கு பைசே.....எப்படி...ஒரு ஒரு லட்சம் கொடுப்பாங்களா எனக்கு?...
சைகோ - USA,Uzbekistan
2010-07-15 19:18:14 IST
R*R=R2 (R square ) that means Rahul Rajiv. This is what the meaning for the new symbol. This means India is for Rahul Rajiv...
salvi - bocham,Germany
2010-07-15 19:01:37 IST
ஓகே இத மக்கள் எப்படி கூப்பிடுவார்கள்...
ரூபன் - HYDERABAD,India
2010-07-15 19:00:10 IST
இதை வைச்சி காமெடி எதுவும் பண்ணலியே...
ashokkumar - chennai,India
2010-07-15 18:57:28 IST
இந்த எழுத்து ரொம்ப கஷ்டம்ப. பேசாம இங்கிலீஷ் ல ர போட்டு அதுக்கு செண்டர ரெண்டு கொடு போடுவோம்ப....
சங்கர்.ப - தேனி,India
2010-07-15 18:46:59 IST
இப்ப இருக்குற நிலைமைக்கு III மூன்று நாமம் கொண்ட இந்த சிம்பளை கொடுத்திருக்கலாம், இதுதானே உண்மை......
N.Indrajith - SoharIndustrialEstate,Pakistan
2010-07-15 18:31:30 IST
நண்பர்களே, ஆங்கிலம், ஹிந்தி, கணக்கு, கலந்துள்ளது, ஆனால் இதில் தமிழ் எங்கே போனது?...
திருமாவளவன் - Chennai,India
2010-07-15 18:26:43 IST
வேலை இல்லாதவன் பூனை மயிர சிரைச்ச கதையா இல்ல இருக்கிறது....
jaykay - india,India
2010-07-15 18:14:03 IST
இது ஹிந்தி எழுத்து மாதிரி இருக்கு இப்ப எங்க போய் மூஞ்ச காட்டுவாரு கலைஞர் பழைய குறியீடு ரொம்ப நல்லா இருந்தது தேவை இல்லாத மாற்றம் ...
THENMOZHI - avinashi,India
2010-07-15 18:06:04 IST
if we will change wt use? namaku manasula pathiyathu intha symbol ...
A.R.UBAYADULLAH - ALKHOBAR,Senegal
2010-07-15 18:04:35 IST
இந்த புதிய CODE வோர்ட் மனதுக்கு திருப்தி இல்லை. ஒரு ஹிந்தி வார்த்தை போல் தெரிகிறது....
Swami - Dubai,United States
மக்களின் கவனத்தை திசை திருப்புறாங்க...
ஸ்டீபன் ராஜ்குமார் - Rajapalayam,India
2010-07-15 17:47:02 IST
இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல செய்தியாகும். குறியீடு சரி. இதே மாதிரி இந்திய பொருளாதரத்தையும் முன்னுக்கு கொண்டு வந்தா நம் இந்திய மக்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க இந்தியா! வளர்க இந்திய மக்கள்...
இம்மானுவேல் ஆசீர் - tuticorin,India
2010-07-15 17:42:11 IST
ஆங்கில எழுத்து 'R மாதிரியும் இருக்கிறது. ஹிந்தி எழுத்து மாதிரியும் இருக்கிறது. மிகவும் நல்ல design. ரூபாய் மதிப்பு மேலும் ஓங்கி வளர வாழ்த்துக்கள்...
எ.ர.UBAYADHULLAH - ALKHOBAR,Senegal
2010-07-15 17:40:10 IST
இந்த குரியீடு ஒன்றும் புரியவில்லை இது தேவை தானா-அம்ம் தேவைதான் இது இந்திய கரன்சியில் உள் குறியீடு தேவை...
ஐய்யப்பன் - udamalai,India
2010-07-15 17:34:32 IST
எது எப்படியோ மாற்றம் அடிக்கடி வருவதுதான் விலைவாசி போல...
RAMJEE - BANGALORE,India
2010-07-15 17:08:06 IST
அந்த இந்தியன் கரன்சி சிம்பல் ல ரெண்டாவது கொடு எதுக்கு போட்டிருக்கான், ஈரோ, டாலர் மாதிரி கோடு இருக்கணும்னு காபி அடிச்சிருக்கான..நமக்கா ஒன்னும் வேறவிதம யோசிக்க தோனாது, இதுல prize வேற குடுக்குறாங்க.....
வசந்த குமார் - Chennai,India
2010-07-15 16:56:14 IST
செம்மொழி மாநாடு நடத்தியும் ஹிந்தியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிகிறது பார்த்தீர்களா?...
பாபு - DOHAQATAR,India
2010-07-15 16:55:12 IST
இந்த குறியீட்டை போட்டால் விலை வாசி குறையும் என்று யாராவது உத்திரவாதம் தரத்தயாரா ? இல்லை என்றால் பேசாமல் மூடி வைத்துவிட்டு வெட்டி வேலை பார்க்காமல் வேறு உருப்படியான வேலையே பார்க்கவும் ....
sathya - Bangalore,India
2010-07-15 16:43:53 IST
This is not indian culture symbol. It's symbol of north indian domination.........
ananth - chennai,India
2010-07-15 16:36:59 IST
இதுல என்ன படைப்புத்திறன் இருக்கு. வெங்காயம். இந்தி "ர" ல குறுக்கே ஒரு கோடு போட்டிருக்காரு. இது ஏற்கனவே இவனுங்க ஏற்கனவே யோசிச்சு வச்ச ஒரு உருவம் தான். நாங்களா தேர்ந்தெடுக்கல, போட்டி வச்சோம்னு சொல்லனும்ல. அதனாலதான் இந்த டிராமா. இதுல உதயகுமார் ஒரு கருவி தான். எனக்கு இந்த குறியீடு பிடிக்கலை, தொடர்ந்து Rs ன்னுதான் எழுதப்போறேன்....
ல.மணிமாறன் - jubail,India
2010-07-15 16:28:59 IST
ஏம்ப்பா, krishna, சென்னை. அதான் போட்டோவில் இருக்கிற அந்த அம்மா கையில் புதிய குறியீட்டின் படம் உள்ளதே. அப்புறம் என்ன what is the new symbol ? போதாத குறைக்கு தினமலர் விளக்கமும் கொடுத்திடுச்சு. நீங்க எல்லாம் என்னத்த பேப்பர் படிச்சி புரிஞ்சிகிறீன்களோ? எனக்கு புரியலை. நாட்டுல நிறைய பேர் இந்த மாதிரி இருக்கீங்க....
ல்.மணிமாறன் - jubail.saudiarabia,India
2010-07-15 16:19:42 IST
குறியீடு இருக்கட்டும் விலைவாசி குறையுமா..........
Muthu vel - Erode,India
2010-07-15 16:27:08 IST
There r lot of problems in nation . Why need these changes now. Its al eye wassh to hide al the problems . First of al reduce petrol , disel and Gas rate ....
M இந்தியன் - Dubai,United States
2010-07-15 16:00:50 IST
சரி இதை எப்படி உச்சரிப்பது ??????...
ஜி.கே. சிவராமகிருஷ்ணன் - DUBAI,United States
2010-07-15 15:56:35 IST
அரிவாள் சுத்தியல் சின்னத்தை உல்ட்டா பண்ணி KALAAIKIRAANGODOI...
சரவணன் - திருவாரூர்,India
2010-07-15 15:56:06 IST
நானும் இந்த போட்டிக்கு வடிவமைப்பை அனுப்பினேன். அந்த இரட்டைக் கோடுகள் என்னுடைய வடிவமைப்பிலும் இருந்தது. அந்த படுக்கைக் கோடுகளை சற்று சாய்வாக அமைத்து இந்திய பொருளாதாரம் நாளுக்குநாள் வளரும் என்று கூறியிருந்தேன். ஆறுதல் பரிசு தருவார்களா?...
RAVI - Chennai,India
2010-07-15 15:32:21 IST
ஜனங்க இந்தியில ஒரு எழுத்தை கத்துக்குவாங்க...
சதீஷ் - udumalpet,India
2010-07-15 15:04:34 IST
தெரிந்து இருந்தால் நான் ஒரு குறியீடு உருவாக்கி இருப்பேன். 2.5 லட்சம் போச்சே. சொக்கா!!!! - தருமி...
ஸ்ரீராம் - Kumbakonam,India
2010-07-15 14:35:03 IST
என்ன இங்க ஹிந்தி வார்த்தை ? தமிழ் எங்க போச்சி என்று திமுக கட்சி ஒரு போராட்டம், கடிதம்,வெளிநடப்பு என்று ஒரு காமடி நடக்க வாய்ப்பு உள்ளது....
arun - Pudukkottai,India
2010-07-15 13:41:47 IST
நல்ல உத்து பாருங்கோ இது ஹிந்தி எழுத்துங்கோ?...
வி .கணபதி - Dubai,India
2010-07-15 13:52:09 IST
" நீங்க எந்த குறிய வேணும்னாலும் மாத்திகிங்க. அத பத்தி கவலை இல்லை . இதனால கருப்பு பணத்த தடுக்க முடியுமா ....? இதனால் யாருக்கு என்ன பயன் ? திருடுறவன் திருடிக்கொண்டுதான் இருப்பான்...........
raam - radhanarasimmapuram,India
2010-07-15 13:51:55 IST
சீனா எழுத்து மாதிரி இருக்கு. எளிமையா 5 வது வடிவம் மாதிரி வைக்க கூடாத?...
தர்மர் - baghdad,Iraq
2010-07-15 13:40:28 IST
சரி இதை எப்படி அழைப்பது? டாலரா? இந்திய ...?...
ராமகிருஷ்ணமுர்த்தி - muscat,Pakistan
2010-07-15 13:38:09 IST
வாழ்த்துக்கள் உதயகுமார்...
Sathyamoorthy - Dubai,India
2010-07-15 13:37:47 IST
ரொம்ப தேவைதான்....

No comments:

Post a Comment